பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் சாவ்ரயா படத்துக்கு பிறகு தற்போது டில்லி 6 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரண்பீர் கபூருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்ட சோனம், தற்போது குணால் கபூருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதுபற்றி சோனம் கபூர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருப்பதை ஏற்க ஏன் மறுக்கிறார்கள்? அதேபோல் அவருக்கு வேறு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தால் உடனே எங்கள் உறவு முறிந்ததாக அர்த்தமா? நான் மற்ற ஆண் நண்பர்களுடன் வெளியே சென்றால் ரண்பீரை நான் உதறிவிட்டதாகப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். கடவுளே, இதற்கு நீதான் பதில் சொல்ல வேண்டும், என்று சூடாகவும், உருக்கமாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் சினிமா உலகில் யாருடனும் நோ டேட்டிங் என்ற கொள்கை முடிவை எடுத்திருப்பதாகவும் சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.