ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் இளம் நாயகன்-நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரன்வீர் சிங்கும்-அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் தாங்கள் காதலர்கள் இல்லை என்று கூறிவரும் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் பொது இடத்தில் லிப் டு லிப் ஹிஸ் கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.
பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகர்ளில் ரன்வீரும், அனுஷ்கா ஷர்மாவும் ஒருவர். இருவரும் காதலித்து வருகின்றனர். ஆனால் இதை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் வரை புகைப்படக்காரர்களை கண்டாலே ஓட்டம் பிடிக்கும் இந்த ஜோடி, இப்போது தைரியமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரன்வீரும்-அனுஷ்கா ஒரே காரில் வந்து இறங்கினர். நிகழ்ச்சிக்கு ஒருவர் தோள் மீது ஒருவர் கைபோட்டபடி புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர்.
நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் அதில் பங்கேற்ற பிரபலங்கள் ஆடத் தொடங்கினர். மிகுந்த உற்சாகமடைந்த ரன்வீர்-அனுஷ்கா ஜோடி கட்டிப்பிடித்தபடி நடனம் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், பொது இடம் என்று கூட பாராமல் இருவரும் லிப் டு லிப் ஹிஸ் கொடுத்தனர். இதனை பார்த்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.