ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து புகழ்பெற்றவர் நந்தினி. தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சீசன் 5ல் நடுவராக இருக்கிறார். கார்த்திகேயன் என்ற இளைஞரை காதலித்து வரும் நந்தினி, விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சரவணன் மீனாட்சியில் நடித்துக் கொண்டிருந்த நான் தற்போது ரியாலிட்டி ஷோவுக்கு வந்திருக்கிறேன். நடிக்கும்போது இயக்குனர் சொல்வதை அப்படியே செய்து விட்டால் நடிப்பு வேலை முடிந்து விடும். ஆனால் ரியாலிட்டி ஷோ நடத்த டைமிங் சென்ஸ் வேண்டும், நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சவாலன வேலை இது.
சேனலில் நான் பிசியாக இருந்தாலும் வீட்டில் தீவிரமா மாப்பிள்ளை தேடி வந்தார்கள். அப்போது என்னை குடும்பத்துடன் பார்க்க வந்தவர்தான் கார்த்திகேயன். திருமணத்தில் விருப்பம் இல்லை என்றேன். அதனால் என்ன நல்ல நண்பர்களாக இருப்போம் எனது ஜிம்முக்கு வாங்க என்று அழைத்தார். அவரது ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன். அவரது குணம், அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நட்பில் ஆரம்பித்து இப்போது காதலாகியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்கிறார் நந்தினி.