நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழ்நாட்டில் உள்ள நமீதாவுக்கு படு கிளாமர் இமேஜ் இருக்கிறது. மலையாளத்திலும் ஒரு நமீதா இருக்கிறார் அவருக்கு நேர் எதிர்மாறான இமேஜ் அங்கு. நல்ல நடிகை, எளிமையானவர் என்ற இமேஜ். அவருக்கு தமிழ் படத்தில் நடிக்க ரொம்பவே ஆசை.
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர் சந்தியன் அந்திக்காடு இயக்கிய புதிய தீரங்கள் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். படம் ஹிட்டாக வாய்ப்புகள் குவிந்தது. தற்போது துல்கர் சல்மான், திலீப், பிருத்விராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து தமிழுக்கு வருகிறார்.
"மலையாள நடிகைகள் அனைவருக்குமே தமிழில் நடிக்கும் ஆர்வம் இருக்கும். எனக்கும் இருக்கிறது. அங்கும் ஒரு நமீதா இருப்பது தெரியும், அவர் மாதிரி கிளாமராக நடிக்க என்னால் இயலாது. என் உடல்வாகு அதற்கு ஏற்றதல்ல. ஆனாலும் மார்டன் பெண்ணாக நடிப்பதில் பிரச்சினை இல்லை. பெயர் குழப்பம் வரக்கூடாது என்தற்காக எனது பெயருக்கு பின்னால் பிரமோத் என்ற அப்பா பெயரையும் வைத்திருக்கிறேன். இப்போது நான் நமீதா பிரமோத். விரைவில் தமிழுக்கு வருகிறேன்" என்கிறார் இந்த ஹோம்லி நமீதா.