தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அந்த இசை வெளியீட்டுவிழாவில், தாடிக்காரருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றி திரையுலகில் பலருக்கும் வியப்பு. முதல்வரிசையில் இடம் ஒதுக்கியது மட்டுமல்ல, சிறப்பு விருந்தினரே அவர் தான் என்பதுபோல் அவரது முன்னிலையில் தான் அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது போல தெரிந்தது. ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? எல்லாம் காரணத்தோடுதான் என்கிறார்கள் சிலர்.
அதாவது, விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கும் அந்த நடிகர், தன் கட்சிக்கு கூட்டம் சேர்க்க தான் அந்த தாடிக்காரரை தன் பக்கம் இழுத்துள்ளார் என்கிறார்கள். மேலும் இதற்காகத்தான் தன் மகன் படத்தின் நிதி பிரச்னையையும் தீர்த்து வைத்தார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதற்கு அந்த தாடிக்காரரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். விரைவில் இந்த கூட்டணி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.