டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இருபது வருடங்களுக்கு முன் 'அழகிய ராவணன்' என்கிற அழகான படத்தை தந்த மம்முட்டி-இயக்குனர் கமல் கூட்டணியில் உருவாகிவரும் படம் 'உடோபியாயிலே ராஜாவு'. மம்முட்டி படம் என்றாலே ஷூட்டிங் ஸ்பாட்டில் சுவராஸ்யத்திற்கு குறைவு ஏது...? இந்தப்படத்தில் மம்முட்டியிடம் வகையாக மாட்டிக்கொண்டு முழித்தவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள ஜுவல் மேரி தான். படத்தில் மம்முட்டி. நெடுமுடி வேணு உட்பட பல நடிகர்களின் காம்பினேஷனில் ஜுவல் மேரி நடிக்க வேண்டிய காட்சி ஒன்றை படமாக்கினார்களாம்.
அப்போது கேமரா ஜுவல் மேரியை நோக்கியும் மற்ற நடிகர்களின் முதுகுக்கு பின்புறமாகவும் இருக்க மற்ற நடிகர்களின் பார்வை அனைத்தும் ஜுவல் மேரியை நோக்கி இருந்ததாம். இதனால் நெர்வசான ஜுவல் மேரி, பலமுறை டயலாக்கை சரியாக சொல்லாமல் சொதப்பினாராம். ஒருகட்டத்தில் மம்முட்டி அங்கே ஷூட்டிங்கிற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிகளில் இருந்து ஒரு முருங்கைக்காயை உருவி செல்லமாக ஜுவல் மேரியை அடித்தாராம். அடுத்து வரும் டேக்கில் சரியாக நடிக்கவில்லை என்றால் உனக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோயினை அழைத்துவர வேண்டி இருக்கும் என பொய்க்கோபம் காட்டினாராம்..
என்ன ஆச்சர்யம்.. அடுத்த டேக்கிலேயே ஓகே பண்ணிவிட்டாராம் ஜுவல் மேரி.. அதன்பின் அவரை அழைத்த மம்முட்டி “நீ மட்டுமல்ல எல்லோருமே ரீ டேக் வாங்க கூடியவர்கள் தான்.. அதனால் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள கூடாது என ஆறுதல் கூறினாராம்.. இருந்தாலும் மனம் கேட்காமல் இயக்குனர் கமலிடம் தனது ரீடேக்குகளுக்காக மன்னிப்பு கேட்டாராம் ஜுவல் மேரி. அவரும் மம்முட்டி சொன்னதையே சொன்னாராம்..
பின்குறிப்பு : மம்முட்டி அப்படியெல்லாம் இன்னொரு ஹீரோயினை மாற்றிவிடுவாரா என்ன..? பின்னே.. தான் நடித்துள்ள 'பாதமாறி' படத்தில் தனக்கு ஜோடியாக அறிமுகமான ஜுவல் மேரியின் நடிப்பு நன்றாக இருக்கப்போய்', தனது அடுத்த படமான இதிலும் ஜுவல் மேரியையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யச்சொன்னது மம்முட்டி தானே.