பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இத்தனை நாளும் சிம்புதான் தலயின் ஆத்மார்த்தமான ரசிகராக இருந்து வந்தார். இப்போதும் இருந்து வருகிறார். ஆனால், அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்துள்ள ஆர்யா, விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள யட்சன் படத்தில் அஜித்தின் வெறித்தனமான ரசிகராக நடிக்கிறாராம். அதனால் ஒரு காட்சியில் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் அஜித்தின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கிறாராம். அதோடு அஜித் படம் ரிலீசாகும் அன்று மேளதாளம் முழங்க செம ஆட்டம் பாட்டம் என்றும் அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம் ஆர்யா. இதுபோன்ற காட்சிகளை யட்சன் ட்ரெய்லரிலேயே காண்பித்து அஜித் ரசிகர்களை உஷார்படுத்தியுள்ள விஷ்ணுவர்தன், தியேட்டர்களுக்கு ரசிகர் கூட்டத்தை கூட்ட இன்னும் அஜித்தைப்பற்றி ஆர்யா பேசும் சில அதிரடியான டயலாக்குகளையும் அடுத்தடுத்து வெளியிட்டு யட்சன் படத்திற்கு பரபரப்பு கூட்டப்போகிறாராம்.