இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் வெற்றி பெற போராடிக் கொண்டிருக்கும் நடிகைளில் ஒருவர் சுனுலட்சுமி. சிரித்தால் ரசிப்பேன், செங்காத்து பூமியிலே, எப்போதும் வென்றான், டூரிங் டாக்கீஸ் படங்களில் நடித்தார். எந்த படமும் வெற்றி பெறாததால் சுனு லட்சுமியும் லைம் லைட்டிற்கு வரவில்லை.
தற்போது அவர் ''பீர்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். அசோக் குமார் என்ற புதுமுகம் தயாரித்து இயக்குகிறார். இசையும் அவரே. கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். முதல்கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் நடந்து வருகிறது.
"இன்றைய இளைய சமுதாயம் மதுவுக்குள் தங்களை தொலைத்து வருகிறது. வேலைவாய்ப்பு, சுயமரியாதை, குடும்பம், மனைவி மக்கள் அனைத்தையும் மதுவுக்குள் புதைத்து வருகிறது. மது பழக்கத்தின் ஆதாரமாக இருப்பது பீர். அதில் தொடங்கும் பழக்கம் எப்படி உயிர் வரை ஒரு மனிதனை பாதிக்கிறது. பீர் கலாச்சாரத்தால் எந்த அளவிற்கு கலாச்சார சீர்கேடுகள் பெருகி இருக்கிறது என்பதையும் இந்தப் படத்தில் காட்டுகிறோம்" என்கிறார் இயக்குனர் அசோக்குமார்.