ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் ஹரியிடம் உதவியாளராக இருந்த பிரசாந்த் அடிப்படையில் ஒரு குறும்பட இயக்குனர். பல குறும்படங்களை இயக்கி விருதுகள் பெற்றிருக்கிறார். அவர் இயக்கும் பெரும்படம் யானும் தீயவன். புதுமுகம் அஸ்வினுடன் வர்ஷா ஜோடியாக நடிக்கிறார். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
"எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவனை மேலும் மேலும் துன்புறுத்தும்போது ஒரு கட்டத்தில் நானும் தீயவன்தான் என்று அவன் பொங்கி எழுந்து விடுவான். அதுதான் படத்தின் கதை. கல்லூரி படிப்பை முடித்த கையோடு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் பணியில் தீவிரமாக இருக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் அவர்களது நண்பர்களை ஒரு சிக்கலில் மாட்டிவிடுகிறது ஒரு கும்பல். தாதா, அரசியல்வாதி, பிசினஸ்மேன் கலந்த கலவையான கூட்டம் அது. அந்த சிக்கலிலிருந்து வெளிவர எத்தனையோ முயற்சிகள் செய்து பார்த்தும் முடியாததால் வில்லன்கள் காட்டும் அந்த கொடூரத்தை ஹீரோவும் கையிலெடுக்கிறார். இது வன்முறையை தூண்டுகிற படம் அல்ல. எறும்பைகூட நசுக்க முயலும்போது அது திருப்பி தாக்கும். இதை சமூகத்துக்கு தீங்கு செய்பவர்கள் உணர வேண்டும் என்கிற கதை. முழு கதையும் சென்னையில் நடக்கிறது" என்றார் இயக்குனர் பிரசாந்த்.