‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இருக்கிறார்கள்.. மலையாளத்தில் நிறைய ஹீரோயின்கள் இருக்கவே செய்கிறார்கள்.. மலையாளத்தில் இந்த ஆறு மாதத்தில் மட்டுமே ஏழு ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் ஹீரோயின்களை உற்பத்தி செய்யும் மலையாள சினிமாவுக்கு புதுப்புது கதாநாயகிகளை கண்டுபிடித்தாக வேண்டிய கடமை இருக்கிறதே. அதனால் தான் அவ்வப்போது கதாநாயகிகள் தேவை என விளம்பரம் கொடுப்பது வழக்கம்.. கேரளாவில் இயல்பாகவே பெண்களுக்கு சினிமா ஆர்வம் அதிகம் என்பதால் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்துவிட்டு தேடிவரத்தான் செய்கிறார்கள்..
ஆனால் அங்கே எந்த உப்புமா கம்பெனியும் இப்படி விளம்பரம் கொடுத்து நடிக்க வைக்கிறோம் என சீட்டிங் பண்ணாததாலும் மிகப்பெரிய இயக்குனர்களோ தயாரிப்பு நிறுவனங்களோ தான் இப்படி விளம்பரம் கொடுப்பதாலும் வாய்ப்பு தேடிவரும் பெண்களிடம் நம்பகத்தன்மை அதிகமாகிறது. 'இப்போது துல்கருக்கும் இப்படித்தான் ஒரு கதாநாயகி வேண்டும் என விளம்பரம் கொடுத்துள்ளார்கள். 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சமீர் தாஹிருடன் ஒரு படத்தில் துல்கருடன் இணைந்து பணியாற்றுகிறார் என ஏற்கனவே சொல்லியிருந்தோம்.