Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

யூ டியூப்பில்நீக்கப்பட்ட காட்சிகள் : தமிழ் சினிமாவின் புது டிரண்ட்

03 ஆக, 2015 - 12:39 IST
எழுத்தின் அளவு:
New-trend-in-kollywood-:-Deleted-scenes-in-youtube

யூ டியூப் மக்களின் புழக்கத்திற்கு வந்த காலத்திலிருந்தே ஹாலிவுட்டில் நடைமுறைக்கு வந்து விட்ட ஒன்று நீக்கப்பட்ட காட்சிகளை பதிவேற்றம் செய்வது. ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகளை யூ டியூப்பில் வெளியிட்டு விடுவார்கள். படத்தை பார்த்த மக்கள் ஆர்வத்தால் இதனையும் பார்ப்பார்கள். அதன் பின்னர் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள், ஆட்சேபகரமான காட்சிகள் ஆகியவையும் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஹாலிவுட்டில் இதற்கென தனி வெப்சைட்டுகளே உள்ளன. இப்போது படம் வெளிவதற்கு முன்பே நீக்கப்போகும் காட்சிகளை வெளியிட்டு படத்திற்கான புரமோஷனாக அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


இப்போது அந்த டிரண்ட் தமிழ் சினிமாவுக்கும் வந்து விட்டது. தமிழ் சினிமாவில் தணிக்கை அதிகாரிகளால் நீக்கப்பட்ட காட்சிகள், படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகள் யூ டியூப்பில் வெளியிடப்படுகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர்களே வெளியிடுகிறார்கள். ஒரு காமெடி நடிகரின் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டால் அந்த காட்சிளை அந்த காமெடி நடிகர் வாங்கி தனது சைட் மூலமாக யூடியூப்பில் வெளியிட்டு விடுகிறார்.


ஹாலிவுட் போன்று தமிழிலும் இதற்கென ஒரு வெப்சைட் தொடங்க சிலர் முயற்சித்தார்கள். இது தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு வரவே சங்கம் அனைத்து தயாரிப்பாளர்களையும் அழைத்து பேசி மற்றவர்கள் வெளியிடுவதை விட நீங்களே வெளியிடுங்கள் அது உங்களுக்கு கூடுதல் வருமானத்தை தரும் என்று அறிவுறுத்தியது. அதன்படி தற்போது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களே வெளியிட்டு வருகிறார்கள்.


யூ டியூப்பில் வெளியிடப்படும் வீடியோக்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான மக்கள் பார்க்கும்போது அந்த வீடியோவின் முன்னும், பின்னும், இடையிலேயும் யூடியூப் விளம்பரங்களை வெளியிடும். அந்த விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் குறிப்பிட்ட சதவிகிதத்தை வீடியோவை வெளியிட்டவர்களுக்கு வழங்கும். இது தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருமானம்.


யூடியூப்பில் பழம்பெரும் திரைப்படங்களின் காட்சிகள் தனி நபர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக எம்.ஆர்.ராதா, சிவாஜி, எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகள் நிறைய பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் யூ டியூப் விளம்பரம் வெளியிடுகிறது. இதற்கான விளம்பர பங்குத் தொகை கோடி கணக்கில் கிடக்கிறதாம். அதை வாங்க யாரும் முன்வரவில்லை. யாருக்கு கொடுப்பது என்று யூடியூப் நிறுவனத்துக்கும் தெரியவில்லை என்கிறார்கள்.


தற்போது நீக்கப்பட்ட காட்சிகள் முறைப்படி யுடியூப்பில் பதிவு செய்யப்படுவதால் பணம் தயாரிப்பாளர்களுக்கே வந்து விடும் என்கிறார்கள். இதில் சில சிக்கல்களும் இருக்கிறது. ஒரு படத்தில் நீக்கப்படும் சில முக்கிய காட்சிகளின் ஐடியாக்களை அந்த இயக்குனர் தனது அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார், யூடியூப்பில் வெளிவந்து விடுவதால் அது முடியாமல் போய்விடும். அதோடு சில காட்சிகளில் நடிகர்கள் ஓகே ஆகாத டேக்குகளில் சொதப்பி இருப்பார்கள். அந்த காட்சிகளை பட யூனிட்டில் உள்ளவர்களே வெளியிட்டு விடுவார்கள். ஒரு இயக்குனருக்கும், நடிகருக்கும் மோதல் வந்துவிட்டால் அந்த நடிகர் சொதப்பிய காட்சிகளை இயக்குனரே யுடியூப்பில் வெளியிட்டு நடிகரின் மானத்தை வாங்கி விடுவார். தற்போது இந்த மாதிரியான வீடியோக்கள் வருவது குறைவுதான், வருங்காலத்தில் நிறைய வரலாம்.


ஒரே படத்தின் கதையில் இரண்டு கிளைமாக்ஸ்கள் எடுப்பார்களாம். ஒரு கிளைமாக்ஸ் படத்தில் இருக்கும் இன்னொரு கிளைமாக்ஸ் யூடியூப்பில் பார்க்கலாம் என்று விளம்பரபடுத்துவார்கள். சமீபத்தில் வெளிவந்த ஓகே கண்மணி படத்துக்காக மணிரத்னம் இரண்டு கிளைமாக்ஸ் எடுத்திருந்தாராம். துல்கரும், நித்யாவும் தொடர்ந்து லிங்விங் டு கெதராகவே வாழ்கிற மாதிரி ஒன்று. இருவரும் திருமணம் செய்து கொள்கிற மாதிரி ஒன்று. இரண்டாவது கிளைமாக்ஸ் படத்தில் இடம்பெற்றது. இந்த கிளைமாக்சை மக்கள் ஏற்றுக் கொண்டதால் இரண்டாவது கிளைமாக்ஸை அவர் வெளியிடவில்லை. ஒருவேளை படம் தோல்வி அடைந்திருந்தால் இன்னொரு கிளைமாக்ஸ் யூ டியூப்பில் வெளியிடப்பட்டிருக்கும் என்கிறார்கள்.


தற்போது ஆரம்பித்து விரைவில் பெரிய அளவில் வளரக்கூடியதாக இருக்கும் இந்த புதிய டிரண்டில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. எதை அதிகமாக பயன்படுத்தப்போகிறோம் என்றுதான் தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in