ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது ஸ்ரீமந்துடு படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்ரீமந்துடு திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் நாயகியான நடிகை ஸ்ருதிஹாசனும் ஸ்ரீமந்துடு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ளார். இதற்காக படக்குழுவினருடன் மீடியாக்களைச் சந்தித்த மகேஷ் பாபு நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் மகேஷ் பாபுவிடம் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு மகேஷ் பாபு ஏன் கூடாது? என எதிர் கேள்வி கேட்டுள்ளார். டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரையும் பவர் ஸ்டாரையும் இணைக்கும் வண்ணம் ஒரு வலிமையான கதைக் களத்துடன் திறமையான இயக்குனர் அவர்களை அணுகினால் பவன் கல்யாண் - மகேஷ் பாபு கூட்டணியை திரையில் காணலாம்.