பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள இயக்குனர் சமீர் தாஹிர் பற்றி கேட்டால் யாரது என உதட்டை பிதுக்குவீர்கள் என்பது தெரியும்.. ஆனால் தமிழில் கடந்த வருடம் வெளியான விமல், பிரசன்னா நடித்த 'புலிவால்' படம் பற்றி தெரியும் தானே.. அதன் மலையாள ஒரிஜினலான, பஹத் பாசில், வினீத் சீனிவாசன் நடித்த சூப்பர்ஹிட் படமான 'சாப்பா குரிசு'வை இயக்கிவர்தான் இந்த சமீர் தாஹிர். அடிப்படையில் ஒளிப்பதிவாளராக சினிமாவில் நுழைந்த இவர் 'பிக் பி' மற்றும் 'டாடி கூல்' என மம்முட்டியின் இரண்டு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த வருடத்தின் மெகா ஹிட்டான 'பெங்களூர்' டேய்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர் தான்.
பஹத் பாசிலை வைத்து முதல் படத்தை இயக்கியவர், தனது அடுத்த படமான நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' (அப்பா எவ்வளவு நீளமான டைட்டில்) படத்தில் துல்கர் சல்மானுடன் கூட்டணி வைத்தார். தனது காதலியை தேடி வட இந்திய மலைப்பகுதி கிராமம் ஒன்றிற்கு தனது நண்பனுடன் பைக்கிலேயே பயணம் செய்யும் ஹீரோவின் கதைதான் இது. இந்தப்படத்தை தொடர்ந்து சமீர் தாஹிரும், துல்கரும் புதிய படத்தில் மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள். இந்த தகவலை சமீர் தாஹிரின் நண்பரும் இந்தப்படத்தை தயாரிப்பவருமான ஆஷிக் உஸ்மான் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.