ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழில் வெளிவந்த நேரம் படத்தில் நாயகனாக நடித்த நிவின் பாலி மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். அண்மையில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படமான பிரேமம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலை வாரிக் குவித்து வருகின்றது. இப்படத்தை தமிழில் நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார். இப்படத்தை தெலுங்கு நடிகர் ராம் டோலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இத்தகவலை நடிகர் ராம் மறுத்துவிட்டார். தற்போது நடிகர் நாக சைதன்யா பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஸ்ரவந்தி ரவி கிஷோர் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார். சிறு வயது முதல் கல்யாணம் வரை நாயகனுக்கு ஏற்படும் காதல் வாழ்க்கையை சித்தரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட பிரமம் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. பிரமம் படத்தின் தமிழில் ரீமேக்கில் நடிகர் தனுஷின் பெயர் அடிபடுகின்றது.