துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்தார் எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டோலிவுட்டின் பவர் ஸ்டார் என ரசிகர்களிடம் புகழ் பெற்றுள்ள நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமான சர்தார் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது துரிதமாக நடைபெறுகின்றன. புனேவில் நடைபெற்ற இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் ஜூலை 29 ஆம் தேதி முதல் துவங்கியது. ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பில் பவன் கல்யாண் கலந்து கொள்வார் என படக்குழுவினர் கூறினர். இயக்குநர் பாபி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் நேற்று(ஜூலை 31) முதல் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் நேற்று வெளிவந்த இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. பவன் கல்யாண் ரசிகர்கள் இந்த பஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.