டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இப்போது மார்க்கெட்டில் மந்த நிலையில் இருக்கும் அத்தனை ஹீரோக்களுமே தங்களுக்கு பேலன்ஸ் வேண்டும் என்கிறபோது விஜயசேதுபதியைத்தான் நினைக்கிறார்கள். அவர் இருந்தால் கமர்சியல் ரீதியாக பிரச்னை இல்லை என்பதோடு, மற்றவர்களெல்லாம் தங்களுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்பார்கள். ஆனால் இவர் மட்டும்தான் தனக்கான கேரக்டர் பிடித்து விட்டாலே ஓகே சொல்லி விடுபவராக இருக்கிறார். அதனால் பல ஹீரோக்களும் விரும்பும் நடிகராகி விட்டார் விஜயசேதுபதி.
அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள சகலகலா வல்லவன் படத்தில் சூரியை பேலன்சாக கொண்டு நடித்திருக்கும் ஜெயம்ரவி, அடுத்தபடியாக ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கும் புதிய படத்தில் விஜயசேதுபதியுடன் நடிக்கிறாராம். அந்த படமும் ரோமியோ ஜூலியட் பாணியில் இந்த காலத்து காதலை சொல்லும் படம்தானாம்.
அதில் ஒரு ஜாலியான வேடத்தில் விஜயசேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தபோதும், ஏற்கனவே கைவசமுள்ள படங்களை முடிக்க வேண்டியதிருப்பதால் இன்னும் அவர் கால்சீட் கொடுக்கவில்லையாம். ஆனால் நடிப்பதற்கு சம்மதம் கூறியிருக்கிறாராம்.