Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனின் சூரி செண்டிமென்ட்!

01 ஆக, 2015 - 08:22 IST
எழுத்தின் அளவு:
Sivakarthilkeyan---Soori-sentiment

சிம்பு, ஆர்யா, ஜீவா, உதயநிதி உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு எப்படி சந்தானம் செண்டிமென்ட் காமெடியனோ அதேபோன்று ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன், விஷால், விமல், விதார்த் போன்ற பல நடிகர்களுக்கு சூரி செண்டிமென்ட் காமெடியனாக இருக்கிறார்.


இவர்களில் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணிக்கு நல்லதொரு வரவேற்பு உள்ளது. அவர்கள் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் அவர்களது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டதோடு, படங்களும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிதான் இப்போது ரஜினி முருகன் படத்திலும் அவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது.


அதோடு, அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, காக்கி சட்டை படங்களில் காமெடி காட்சிகள் பெரிதாக பேசப்படவில்லை. அதேசமயம், தற்போது அவர்கள் இணைந்து நடித்துள்ள ரஜினிமுருகன் படத்தில் அவர்களின் காமெடி அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தியாகவே உள்ளதாம். அதனால் படம் கண்டிப்பாக ஹிட்டாகி விடும் என்கிற நம்பிக்கை இப்போதே சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது.


அதனால், தனது புதிய படத்திலும் சூரி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் சிவகார்த்திகேயன். ஆனால், தற்போது கோடம்பாக்கத்தின் நம்பர்-ஒன் காமெடியனாகி விட்ட சூரி, அஜீத், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்கள் உள்பட பத்து படங்களுக்கு மேல் நடிப்பதால், அடுத்து அவரது கால்சீட்டுக்காக, சிவகார்த்திகேயன் உள்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுமே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in