மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம், அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கீர்த்தனா, தற்போது இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கீர்த்தனா. நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே, தனது அசாத்திய நடிப்பின் காரணமாக, தேசிய விருது வென்றார் கீர்த்தனா. பின் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்கமே தனது லட்சியம் என்று கூறி, நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்
இதனிடையே படிப்பை நிறைவு செய்துள்ள கீர்த்தனா, இயக்குநர் மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தின் உதவி இயக்குநராக தற்போது இணைந்துள்ளார்.
அந்த படத்தில், கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், துணை நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த துணை நடிகர்கள் தேர்வு குறித்த பணிகளை, கீர்த்தனா மேற்கொண்டுள்ளார்.