ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
1969ம் ஆண்டு, யாஸ் சோப்ரா இயக்கத்தில், ராஜேஷ் கண்ணா நடிப்பில் வௌியான கிளாசிக் படம் ''இத்திபாக்''. பிலிம்பேரில், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல விருதுகளை இப்படம் குவித்தது. இந்நிலையில், இப்படத்தை தற்போது ஷாரூக்கான் தனது ரெட் சில்லி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறார். அதேசமயம் அவர் இந்தப்படத்தில் நடிக்க போவதில்லை, வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கியுள்ளன. ராஜேஷ் கண்ணாவுக்கு ஏற்ற ஹீரோவை தற்போது ஷாரூக்கான் தேடி வருகிறார். ஹீரோ-ஹீரோயின் எல்லாம் முடிவான பின்னர் இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை துவக்க இருக்கின்றனர்.