விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
2006ம் ஆண்டு மிஸ் உத்ராகாண்ட் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லாவண்யா திரிபதிக்கு இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தாள ராட்சஷி என்ற ஒரே தெலுங்கு படம் உயரத்துக்கு கொண்டு சென்றது. மளமளவென தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் பிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் படுதோல்வி அடையவே லாவண்யாவின் தமிழ் கனவு தகர்ந்தது. தெலுங்கு மார்க்கெட்டும் சரிந்தது.
தற்போது பொங்கி வரும் புதுப்புணலாய் புறப்பட்டு வருகிறார் லாவண்யா. தற்போது ஒரு இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதில் வைபவ் ரெட்டியுடன் நடிக்கும் ஒரு படம். தமிழ் தெலுங்கு, இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. தெலுங்கில் விட்ட இடத்தையும், தமிழில் பிடிக்க முடியாத இடத்தையும் பிடிப்பேன் என்கிற நம்பிக்கையுடன் நடித்து வருகிறார் லாவண்யா திரிபதி.