இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல இந்திப் பட வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்தார். ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைப்பதற்கு முன்பே சிக்ஸ் பேக்ஸ் வைத்து திரிந்த வில்லன் மிலிந்த் சோமன். இப்போது உலகின் இரும்பு மனிதான தேர்வாகியிருக்கிறார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹவாய் தீவில் ஆண்டுதோறும் இரும்பு மனிதனுக்கான போட்டி நடக்கும். இதில் நீச்சல், ஒட்டம், சைக்கிள், ஆகிய போட்டிகளில் தீர்மானிக்கப்படும் தூரத்தை 16 மணி நேரத்தில் முடிப்பவர்களுக்கு இரும்பு மனிதன் பட்டம் வழங்கப்படும். இந்தப் போட்டியில் சோமன் 4 கிலோ மீட்டர் தூர நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம், 42 கிலோ மீட்டர் தூர ஓட்டம் ஆகியவற்றை 15 மணிநேரம் 19 நிமிடங்களில் கடந்து இரும்பு மனிதர் பட்டத்தை பெற்றிருக்கிறார்.
49 வயதில் மிலிந்த் சோமன் படைத்திருக்கும் இந்த சாதனைதான் அவரை சினிமா வில்லனாக இருந்தாலும் நிஜ ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது. "மனதில் லட்சியமும், உடலில் கடுமையான உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் உயரத்தை தொட முடியும். மூன்று வருட கடுமையான பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது" என்கிறார் மிலிந்த் சோமன்.