டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிவா மனசுல சக்தி படத்தில் இயக்குநராக அறிமுகமான ராஜேஷ் எம். முதல்படத்திலேயே வெற்றியடைந்த இயக்குநர்களில் ஒருவர். பொதுவாக முதல் படத்தில் பெரிய வெற்றியடைந்த இயக்குநர்கள் இரண்டாவது படத்தில் சறுக்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. இதற்கு எத்தனையோ இயக்குநர்கள் உதாரணமாக இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய இரண்டாவது படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தையும் வெற்றிப்படமாகக் கொடுத்து பாஸ் ஆனார் ராஜேஷ் எம். அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து ஓகேஓகே என்ற படத்தை இயக்கினார்.
முந்தைய இரண்டு படங்களைக்காட்டிலும் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தொடர்ந்து மூன்று படங்களில் வெற்றியடைந்ததும் கதைவிஷயத்தில் சற்றே அலட்சியமான போக்குடன் கார்த்தியை வைத்து அழகுசுந்தரம் என்ற படத்தை இயக்கினார் ராஜேஷ் எம். சந்தானம் இருந்தும் அழகுசுந்தரம் படம் ஓடவில்லை.
இந்தநிலையில்தான் தற்போது வாசுவும் சரவணனம் ஒண்ணாப் படிச்சவங்க படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ஹீரோவும், காமெடியனும் நண்பர்கள், டாஸ்மாக் என ராஜேஷ் படங்களில் உள்ள அத்தனை விஷயங்களும் உள்ளன.
இது குறித்து பேசும்போது சந்தானம் சொன்னார்.... ராஜேஷ் ஏற்கனவே பண்ணின படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சின்னச்சின்ன வித்தியாசம்தான் இருக்கும். ராஜேஷ் படங்கள் ஐபோன் மாதிரி. ஐபோன்5க்கும் ஐபோன்6க்கும் எப்படி சின்னச்சின்ன வித்தியாசம் இருக்குமோ அப்படித்தான். பழைய கதையை மறுபடியும் எடுத்திருக்காரு என்பதை எவ்வளவு நாகரிகமாக சொல்றாரு பாருங்கள்?