Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்தமில்லாமல் உதவி செய்யும் சிவகார்த்திகேயன்

31 ஜூலை, 2015 - 10:09 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-helps-to-Paravai-Muniyama

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் இருக்கும் நாட்டுப் புறப் பாடல் கலைஞரும், சில திரைப்படங்களில் நடித்தவருமான பரவை முனியம்மாவுக்கு சில கலைஞர்கள் உதவி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். விஷால் 5000 ரூபாய் கொடுத்து உதவி செய்தது பற்றியும், தனுஷ் 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்தது பற்றியும் பத்திரிகையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், அப்படி எந்த ஒரு தகவலையும் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பாமல் கடந்த மூன்று மாத காலமாகவே பரவை முனியம்மாவிற்கு மருத்துவ உதவிகளை சத்தமில்லாமல் சிவகார்த்திகேயன் செய்து வருகிறாராம்.


நேற்று தனுஷ் 5 லட்ச ரூபாய் உதவி செய்ய முன் வந்துள்ளார் என்ற தகவல் மீடியாக்களில் வந்த அதே நேரத்தில் நேற்று முன் தினம் மதுரை மருத்துவமனையில் பரவை முனியம்மாவை சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது. அங்கு டாக்டரிடம் பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்து சிவகார்த்திகேயன் பேசுவது போன்ற புகைப்படமாக அது இருந்தது. அதன் பின் சிவகார்த்திகேயன் வட்டாரங்களில் இது குறித்து விசாரித்த போது, கடந்த மூன்று மாதங்களாகவே பரவை முனியம்மாவின் உடல்நிலை பற்றிக் கேள்விப்பட்டதும் தன் உதவியாளரை அனுப்பி வேண்டிய உதவிகளை சிவகார்த்திகேயன் செய்து வந்தாராம். அதோடு நேற்று முன் தினம் மறைந்த அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும் வழியில் மதுரைக்குச் சென்று நேரடியாக பரவை முனியம்மாவை விசாரித்திருக்கிறார்.


அதோடு, இனி மாதா மாதம் அவருக்கு தொடர்ந்து பண உதவி செய்வதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளாராம். எவ்வளவு தொகை என்பதை வெளியில் சொல்வது பரவை முனியம்மாவுக்கு செய்யும் மரியாதையாக இருக்காது என்றும் அது குறித்து மீடியாக்களிடமும் எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறாராம்.


'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ராயபுரம் பீட்டரு....' என்ற பாடலை பாடி ஆடி நடித்தவர் பரவை முனியம்மா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in