புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான் என்பது சின்னக்குழந்தைகளுக்கும் தெரியும். சில வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள ஒரு முயற்சி நடந்தது. ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பு மற்றும், சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்தி காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது வேறு யாருமல்ல.. புலி படத்தின் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்தான்.
புலி படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய ஒளிப்பதிவாளர் நட்ராஜ் விஜய்யைப் பற்றி குறிப்பிடும்போது, இளைய தளபதி சூப்பர் ஸ்டார் விஜய் என்று குறிப்பிட்டார். விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த, கேள்வி நேரம் தொடங்கியபோது... விஜய்யை நீங்கள் சூப்பர் ஸ்டார் என்று சொன்னது தடுமாற்றத்தினாலா அல்லது திட்டமிட்டே சொன்னீர்களா? என்று ஒரு பத்திரிகையாளர் நட்ராஜிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஒளிப்பதிவாளர் நட்ராஜ், விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று நான் தெரியாமல் சொல்லவில்லை... தெரிந்தேதான் சொன்னான். என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆக.. மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை தொடங்கிவிட்டது.