கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தான் இயக்கியுள்ள 'பிரேமம்' படம் மூலமாக மடோனா செபாஸ்டின் என்கிற இன்னொரு அழகுப்புயலை மலையாளத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அதுமட்டுமல்ல, அவரை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் தாரை வார்த்தும் தந்துள்ளார். நிவின்பாலி ஜோடியாக க்ளைமாக்ஸ் போர்ஷனில் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் அள்ளிய மடோனா செபாஸ்டின் இப்போது தமிழில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து அவருக்கு ஜாக்பாட் பரிசாக 'கிங்க லயர்' படத்தில் திலீப்புடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. அதை விட அவருக்கு மிகப்பெரிய கொடுப்பினை என்னவென்றால் பதினாறு வருடங்கள் கழித்து இயக்குனர்கள் சித்திக்-லால் இருவரும் இணைந்து இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதுதான். இந்தப்படத்தில் திலீப் பொய் பேசுவதில் டாக்டரேட் வாங்கியவராக நடிக்கிறார். ஆனால் படத்தில் அவரது பெயர் என்ன தெரியுமா..? சத்யா நாராயணன். மடோனா இதில் மாடர்ன் கேர்ள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.