மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. அதன்பிறகு ஓரிரு படங்களில் அவருடன் நடித்தார். அதன்பிறகு சந்தானம் ஹீரோவாகி விட்டதால் அவரை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தான் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் க்ளைமாக்சில் தனக்கு மனைவியாக நடிக்கும் வேடத்தில் வித்யுலேகாவை நடிக்க வைத்தார். காமெடி நடிகை என்றபோதும் அந்த கேரக்டருக்கு ஏற்ப பீல் பண்ணி நடித்து காட்சிக்கே உயிர் கொடுத்திருந்தார் வித்யுலேகா. அதன்காரணமாக தற்போது ஆர்யாவுடன் தான் நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் வித்யுலேகா சந்தானத்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
இந்த படத்தில் ஆர்யா -தமன்னா ஜோடியைப்போன்று சந்தானம்-வித்யுலேகாவின் கேரக்டரும் பேசப்படும் வகையில் வந்திருக்கிறதாம். இதுபற்றி வித்யுலேகா கூறுகையில்,
இந்த படம் எனக்கு ஒரு லக்காதான் கிடைச்சிருக்கு. ஒரு ஸ்கோப்பான கதாபாத்திரம். ஆர்யா, சந்தானம், தமன்னா என்று நண்பர்களோடு சேர்ந்து நடிச்சிருக்கேன். குரூப்பா இந்த படத்துக்கு எபோர்ட் போட்டிருக்கோம்.
ராஜேஷ் சாரோட எல்லா படங்களிலுமே காமெடி சூப்பரா இருக்கும். இந்த படத்துல இன்னும் ஜாஸ்தியாக கொடுத்திருக்காரு. டப்பிங் பண்ணும்போது நானே விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன். கண்டிப்பாக இந்த படம் 100 சதவிகிதம் ஹிட்தான் என்கிறார்.