ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எம்.ஜிஆர்., சிவாஜி போன்ற பிரபல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. சந்திரமுகி, தசாவதாரம் ஆகிய படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்தார். அதையடுத்து அவர் நடித்த சில படங்கள் திரைக்கு வரவில்லை.
இந்த நிலையில், தற்போது குஷ்புவின் தம்பி அப்துல்லா நாயகனாக நடிக்கும் மாய மோகினி என்ற படத்தில் அடிகளார் போன்று ஒரு மகான் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கே.ஆர்.விஜயா. திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில், கே.ஆர்.விஜயாவின் வேடம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு படம் முழுக்க அவரது கேரக்டரும் ட்ராவல் ஆகிறதாம்.
அதனால், இந்த படத்துக்கு 15 நாட்களுக்கு மேல் அவர் கால்சீட் கொடுத்து நடித்திருக்கிறாராம். மேலும், இதுவரை இந்த மாதிரியான மகான் வேடங்களில் நடித்ததில்லை என்பதால் இந்த வேடத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ளாராம் கே.ஆர்.விஜயா.