பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின், 'ஓ காதல் கண்மணி' படம் மூலம் ஹிட் கொடுத்த மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கவில்லை. ஆனாலும், கார்த்தி, துல்கர் சல்மான் ஆகியோர் அவரின் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதி ஹாசன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடையே கடும் போட்டி நடப்பதாக பேச்சு அடிபடுகிறது.
இவர்களில், புதியவர் என்பதாலும், இளைஞர்களிடம் பிரபலமானவர் என்பதாலும், கீர்த்தி சுரேஷுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். அரை டஜன் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு, இன்னும் முதல் படமே வெளியாகவில்லை. விக்ரம் பிரபுவுடன், 'இது என்ன மாயம்' சிவகார்த்திகேயனுடன், 'ரஜினி முருகன்' உட்பட, அரை டஜன் படங்களில் அவர் நடித்து வருகிறார். அவருக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி, முன்னணி நடிகையரை
ஆச்சரியப்பட வைத்துள்ளது.