‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜூலை 15-ந்தேதியே நடிகர் சங்கத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விஷால்தரப்பு தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. அதையடுத்து, இப்போது செப்டம்பர் மாதத்திற்குள் நடிகர் சங்க தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால், ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமார்-விஷால் ஆகிய இருவரும் நாடக நடிகைகளை தேடித்தேடிச்சென்று வாக்கு சேகரித்து வந்தவர்கள், இப்போது இன்னும் பரபரப்படைந்துள்ளனர். செப்டம்பர் மாதம் கண்டிப்பாக நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என்பதால், யாராவது உதவி கேட்டால் நான் நீயென்று போட்டி போட்டு உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில், பரவை முனியம்மா தற்போது உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் அவர் உதவி கோரினாராம். விளைவு, அவரது மருத்துவ செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக டுவிட் செய்தாராம் விஷால். ஆனால் சரத்குமாரோ, முனியம்மாவை நேரில் சந்தித்து 25 ஆயிரம் கொடுத்து முதல் நபராக உதவி செய்து விட்டாராம்.