பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பீட்சா, சூதுகவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா என பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த கருணாகரனை, ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் கதையின் நாயகனாக்கினார் இயக்குனர் பத்ரி. அந்த படத்தில் கருணாகரனுக்கும், விஜயலட்சுமிக்கும் டூயட்கூட இருந்தது. ஆனபோதும், தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கிய கருணாகரன், தற்போது ராதா மோகன் இயக்கும் உப்புக்கருவாடு படத்தில் கதையின் நாயகனாகியிருக்கிறார். இந்த படத்தில் அட்டகத்தி நந்திதா அவருக்கு ஜோடி.
அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி என்ற படத்திலும் தற்போது ஹீரோவாகியிருக்கிறார் கருணாகரன். காமெடி படமாகவே இருந்தபோதும், அவருக்கு ஜோடியாக ஒரு மும்பை நடிகை நடிக்கிறார். ஆக, மெல்ல மெல்ல ஹீரோ என்ற வளையத்துக்குள் வந்து கொண்டிருக்கும் கருணாகரனை, மேலும் சில இளவட்ட டைரக்டர்களும் நாயகனாக நடிக்க வைக்க கதைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். விட்டால் அவரை முழுநேர ஹீரோவாக்கி விடுவார்கள் போலும்.