விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா |
ஒரு திரைப்படம் வெளிவந்தால் அந்தப் படத்தின் வசூல் என்ன என்பது தான் இப்போதைய பரபரப்பான பேச்சாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு படம் எத்தனை நாள் ஓடியது என்பதுதான் பேச்சாக இருந்தது. ஒரு படம் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடுவதெல்லாம் ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதே ஒரு படம் 7 நாள் தாண்டுவதே பெரிய சாதனையாக உள்ளது.
படம் வசூலைப் பற்றியும், ஓடும் நாட்களைப் பற்றியும் மட்டுமே இதுவரை பேசி வந்தோம். 'பாகுபலி' படம் எத்தனை பேர் படத்தைப் பார்த்தார்கள் என்ற ஒரு புதிய சாதனையை ஆரம்பித்து வைத்துள்ளது. 'பாகுபலி' படத்தை இந்தியா முழுவதும் இதுவரை மூன்றரை கோடி மக்களுக்கும் மேல் பார்த்துள்ளார்கள் என்ற புதிய சாதனை தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன் பி.கே படத்தை 3.5 கோடி மக்கள் பார்த்துள்ளது தான் சாதனையாக இருந்துள்ளது. 'எந்திரன், 3 இடியட்ஸ்' படத்தை 3 கோடி மக்கள் பார்த்துள்ளது இரண்டாவது சாதனையாக இருந்துள்ளது.
ஆனாலும், அந்த சாதனையில் 'பாகுபலி' தனித் தன்மையுடன் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேல் உள்ள தெலுங்கு பேசும் மக்களில் 2 கோடிக்கும் மேல் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார்கள். ஆனால், 75 கோடிக்கும் மேற் உள்ள ஹிந்தி பேசும் மக்களில் 3.5 கோடி பேர் மட்டுமே அந்தப் படத்தைப் பார்த்துள்ளார்கள். விற்கப்பட்ட டிக்கட்டுகளின் அடிப்படையில் இந்த சாதனையை கணக்கிட்டுள்ளார்கள்.