அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
நடிகராக மட்டுமின்றி மலையாளத்தில் பல வருடங்களாக ஒரு இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி வருபவர் தான் லால். இயக்குனர் சித்திக்கும் நம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சித்திக்-லால் இரட்டை இயக்குனர் கூட்டணி ராஜநடை போட்டு வந்தது. ஹிட்லர், பிரண்ட்ஸ், காபூலிவாலா, வியட்நாம் காலனி ஆகிய பிளாக் பஸ்டர் படங்கள் எல்லாம் இவர்களது கூட்டணி இயக்கத்தில் உருவானவை தான். இதில் சில படங்கள் தமிழிலும் ரீமேக்காகி ஹிட்டடித்து இருக்கின்றன.
யார் கண்பட்டதோ தெரியவில்லை, 1999ல் 'ப்ரண்ட்ஸ்' படத்தோடு இவர்கள் கூட்டணி முறிந்தது. பிரிந்தவர்கள் கூடுவது தானே வாடிக்கை.. தற்போது பதினாறு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படம் இயக்கவுள்ளார்கள். 'கிங் லயர்' என்கிற இந்தப்படத்தின் கதாநாயகனாக திலீப் நடிக்க இருக்கிறாராம். சித்திக்கும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை முடித்துவிட்டு ப்ரீயாகி விட்டார்... திலீப் தற்போது 'கனடியன் தருவு' என்கிற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அதை முடித்துவிட்டு வந்ததும் இந்தப்படத்தை துவங்குவார்கள் என தெரிகிறது.