விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
'புதுப்பேட்டை படத்தை, இன்னைக்கு கொண்டாடுறாங்க; 2006ல வெளியான அந்தப் படம், '9 இயர்ஸ் ஆப் புதுப்பேட்டை'ன்னு, 'டுவிட்டர்'ல ட்ரெண்ட் ஆகுது. இந்த 9 வருஷத்துல வெளிவந்த படங்கள்ல, 'புதுப்பேட்டை'யோட தாக்கம், கொஞ்சமாவது இருக்கும். இதுதான் அந்த படத்தோட வெற்றி!' செல்வராகவனின், 'புதுப்பேட்டை,' தமிழ் சினிமாவுக்கு தந்த அடையாளத்தை மறுக்காமலும், மறக்காமலும் பேசுகிறார், அதன் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா.
'காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, பச்சைக்கிளி முத்துச்சரம்' ஆகிய படங்கள் பேசப்பட்டதற்கு, இவரின் ஒளிப்பதிவும் முக்கிய காரணம். செல்வராகவனின் இயக்கத்தில், 'கான்,' தாணு தயாரிப்பில், 'கணிதன்' படங்களுக்கு ஒளிப்பதிவு வேலையில் மூழ்கியிருந்தவர், நீண்ட இடைவேளைக்குப் பின் பேச ஆரம்பித்தார்.
9 ஆண்டுகள் கழித்து, நீங்களும் செல்வராகவனும் இணைந்திருக்கிறீர்கள்...
ஆமா, சந்தோஷமா இருக்கு. எங்க கூட்டணி நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. செல்வராகவன் என்னோட நெருங்கிய நண்பன். ஆனா, அவன் படத்துல ஒளிப்பதிவு பண்றது, சவாலான ஒண்ணு! என்னோட ஒளிப்பதிவுல என்ன குறை இருந்தாலும் அவன் சொல்லிடுவான். அதனால, செல்வராகவனோட முந்தைய படங்களோட தாக்கம், அடுத்த படத்துல இருக்காது.
'கான், கணிதன்' படங்களில், எப்படிப்பட்ட ஒளிப்பதிவை எதிர்பார்க்கலாம்?
'கான்' பட ஒளிப்பதிவுக்கு, நிறைய 'ஹோம் வொர்க்' பண்ணியிருக்கேன்; அது எல்லாமே, ஒளிப்பதிவு எவ்வளவு எளிமையா இருக்கணும்னு யோசிச்சு செஞ்சது. சென்னையை சுத்தி படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். 'கணிதன்' படம், சமூகத்துல நடக்கிற சில அநியாயங்களை தட்டிக்கேட்கிற கதை. கொஞ்சம், 'ஸ்டைலா, பளீச்'ன்னு எடுத்துட்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.
பிரபலமான இயக்குனர்களும், இளம் இயக்குனர்களும்...
நான், 'குசேலன்' படத்துல பி.வாசு சாரோட வேலை பார்த்திருக்கேன்; 'வாமனன், தீராத விளையாட்டுப் பிள்ளை' படங்கள்ல, புது இயக்குனர்களோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். பெரிய இயக்குனர்களோட படத்துக்கு ஒளிப்பதிவு செய்றதுல, ஒரு சவுகரியம் இருக்கும்; அவங்களுக்கு என்ன தேவையோ, அதை 'கரெக்ட்டா' சொல்லிடுவாங்க. தேவைக்கு அதிகமா எதையும், 'ஷூட்' பண்ண மாட்டாங்க. இளம் இயக்குனர்கள் ஒரே, 'ஷாட்'டை நாலு விதமா எடுப்பாங்க. படப்பிடிப்பு முடிஞ்சு, 'போஸ்ட் - ப்ரொடக் ஷன்'ல பார்த்துக்கலாம்னு இருப்பாங்க; எல்லாமே 'டிஜிட்டல்'ங்கறதால, தேவைக்கு அதிகமா எடுப்பாங்க.
மலையாளத்துல ஒளிப்பதிவு செய்த அனுபவம்?
தமிழ்ல, ஒரு சாதாரண நடிகன் வாங்கிற சம்பளத்துல, மலையாளத்துல ஒரு படமே எடுத்திடுவாங்க; அவங்களுக்கு கதை, திரைக்கதை தான் முக்கியம். கேரளாவுல, எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைப் பசேல்னு தான் இருக்கும். அதனால, ஒளிப்பதிவுல பெரிய அளவுல வித்தியாசம் காட்ட வாய்ப்பிருக்காது.
இப்போ இருக்கிற இளம் ஒளிப்பதிவாளர்கள்கிட்டே நீங்க எதிர்பார்க்கிற விஷயம்?
எல்லாமே, 'டிஜிட்டல்' ஆனதுல, 'ப்ளசும் இருக்கு; 'மைனசும்' இருக்கு. அவங்க, தொழில்நுட்பங்கள் பத்தி, 6 மாசத்துக்கு ஒருதடவை 'அப்டேட்' பண்ணிட்டு இருக்கணும். இப்போ இருக்கிற சூழ்நிலையில, இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு, படிப்பு ரொம்ப முக்கியம். இல்லைன்னா, காணாமப் போறதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு.
எந்த வகையான சினிமா உங்களுக்கான ஆர்வம்?
மத்த எல்லா, 'ஜானர்'களையும் விட 'ஹாரர், த்ரில்லர்' படங்கள்ல தான், ஒளிப்பதிவுல நிறைய வித்தியாசம் காட்ட முடியும்.