இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பயர் படத்தில் அறிமுகமானவர் நந்திதாதாஸ். லெஸ்பியனாக நடித்து ஒரே படத்தில் இந்தியா முழுக்க பிரபலமானவர். அதன்பிறகு ஆங்கிலம், இந்தி, ஒரியா, உருது, பெங்காலி, மலையாளம், தமிழ், மராத்தி என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார்.
தமிழைப்பொறுத்தவரை பார்த்திபன் நடித்த அழகி, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்தவர், சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் கடைசியாக நடித்தார். அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சில புதுமுக டைரக்டர்கள் தங்கள் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்தபோது, அதற்கு அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால் நந்திதா தாஸை மறந்து விட்டு அந்த வேடத்துக்கு வேறு நடிகைகளை நடிக்க வைத்தனர்.
ஆனால் நந்திதாதாஸ் இப்படி படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், சமீபகாலமாக அவர் சில டாகுமெண்டரி படங்களை இயக்கி வருகிறாராம். குறிப்பாக, இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் வகையிலான படங்களை இயக்குவதால் நடிப்பதில் அவருக்கான ஆர்வம் குறைந்து விட்டதாம். அதேசமயம், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களிலும் அவ்வப்போது சிக்கிக்கொண்டு வருகிறாராம் நந்திதாதாஸ்.