Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி..!

07 ஜூலை, 2015 - 14:09 IST
எழுத்தின் அளவு:
Mammootty-saw-and-smile-Dulquer-movie-poster

மம்முட்டி தற்போது மார்த்தாண்டன் என்பவர் இயக்கத்தில் 'அச்சா தின்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். காமெடி, குடும்பக்கதை என்று சொல்லப்பட்டாலும் பின்னணியில் மெல்லிய ஆக்சன் இழையோடுவது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. இந்தப்படத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 20 வருடங்களுக்கு முன்பே கேரளாவில் வந்து செட்டில் ஆனவராக நடிக்கிறார் மம்முட்டி. அவருக்கு ஜோடியாக மான்சி சர்மா நடிக்கிறார்.


இந்தப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் மம்முட்டி தனது மனைவியான மான்சி சர்மாவை சைக்கிளில் முன்பக்கம் அமரவைத்து எர்ணாகுளம் சாலைகளில் ஓட்டி வருவார். அப்போது ரோட்டின் ஒரு ஓரத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்திருக்கும் கேரள போலீஸ் என்கிற படத்தின் (படமும் டைட்டிலும் கற்பனை தான்) போஸ்டரில் துல்கரை போலீஸார் துரத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த போஸ்டரின் கீழ நின்று டான்ஸ் ஆடும் மூன்று பேர், அந்த வழியாக சைக்கிளில் வரும் மம்முட்டியை நிறுத்தி அந்த போஸ்டரை காட்டுவார்கள். அதை பார்த்து மம்முட்டியும் மான்சியும் சிரிப்பதாக அந்த பாடல் காட்சி நீள்கிறது.


இதேபோலத்தான் முன்னறிவிப்பு என்கிற படத்தில் மம்முட்டி தங்கியிருக்கும் லாட்ஜின் ரூம்பாயான் சின்னபையன் ஒருவன் துல்கர் சல்மான் பற்றி சொல்ல, துல்கரா யார் அது என கேட்பார் பல வருடம் ஜெயிலில் இருந்துவிட்டு அப்போதுதான் ரிலீஸாகி வந்திருக்கும் மம்முட்டி. தந்தை மகன் சம்பந்தப்பட்ட இந்தகாட்சி கேரள ரசிகர்களிடம் பலத்த கைதட்டலை பெற்றது குறிப்பிடத்தக்கது. .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in