ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
என்னை அறிந்தால் படத்தை அடுத்து 'வீரம்' சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். தல 56 என்று தற்போது குறிப்பிடப்பட்டு வரும் அந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், அஜித்தின் தங்கையாக லக்ஷ்மிமேனனும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. தற்போது இத்தாலிக்குச் சென்று அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
அஜித், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகிறது. இத்தாலி ஷெட்யூல் முடிந்ததும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது. இத்தாலிக்கு செல்வதற்கு முன் அந்தப்பாடல் காட்சிகளை துபாயில்தான் படமாக்க திட்டமிட்டிருந்தனர். அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காத காரணத்தில் இத்தாலிக்கு இடம் மாறியதாக சொல்லப்படுகிறது. தற்போது ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் காலம் என்பதால் துபாயில் கட்டுப்பாடு சற்று அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே தல 56 படத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் அடிபடுகிறது.