மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஸ்வருபம் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய 2 வருட இடைவெளிக்குப் பிறகு கமலின் நடிப்பில் வெளிவந்த படம் 'உத்தம வில்லன்'. எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் ஓடவில்லை. உத்தமவில்லன் தோல்வி காரணமாக 'த்ரிஷ்யம்' ரீமேக்கான 'பாபநாசம்' படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓப்பனிங் இல்லாமல்போனது. கமல் படங்களுக்கே உரிய வழக்கமான எதிர்பார்ப்பும், ஓபனிங்கும் இல்லை என்றாலும், படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு இந்த நிலைமை மாறிப்போனது. படம் பார்த்தவர்கள் இப்படத்தைப் பற்றி 'ஆஹா ஓஹோ'வென புகழ்ந்து தள்ள மவுத்டாக் அடுத்தடுத்த காட்சிகளுக்கு கூட்டம் வரத் தொடங்கியது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை 'பாநாசம்' படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இப்படம் இருப்பதால் ஏ சென்டர் மட்டுமின்றி, பி மற்றும் சி சென்டர்களிலும், வெளிநாடுகளிலும்கூட நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தகவல் அடிபடுகிறது. கடந்த 3 நாட்களில் பாபநாசம் படம் உலக அளவில் 23 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள பாபநாசம், தமிழகத்தில் மட்டும் 15 கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம்.