'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் சன்னி லியோன் இரண்டு வேடங்களில் நடித்துள்ள புதிய படம் மஸ்தி ஜாதே. சன்னியுடன் துஷ்கர் கபூர், வீர்தாஸ், சுரேஷ் மேனன் நடித்துள்ளனர். மிலப் சவேரி இயக்கி உள்ளார். பிரிட்டிஸ் நண்டி தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஆபாச காட்சிள் அதிகமாக இருப்பதாக கூறி மும்பை தணிக்கை அதிகாரிகள் படத்துக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் எக்ஸாமினிங், கமிட்டி, ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார் அங்கேயும் திரையிட அனுமதி மறுத்துவிட்டார்கள்.
காட்சிகளை குறிப்பிட்டு சொல்லுங்கள் நீக்கிவிடுகிறோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. ஒரு சில காட்சிகள் இருந்தால் நீக்கச் சொல்லாம் மொத்த படமே அப்படி இருந்தால் என்ன செய்யமுடிவும் நாங்கள் காட்சியை வெட்டச் சொன்னால் டைட்டில்கார்டுதான் மிஞ்சும் என்று சொல்லி கை விரித்து விட்டார்கள். இப்படி தணிக்கை குழுவின் அத்தனை பிரிவுகளாலும் படத்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார்.