ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க துவங்கியுள்ளார். அவரது நடிப்பில் வௌியான முதல்படமான டார்லிங் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்தப்படியாக புதியவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வௌியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. படத்தின் இசை மற்றும் டிரைலரை ஏ.ஆர்.முருகதாஸ் வௌியிட, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் தந்தை பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் காஸ்மோ சி.ஜே.ஜெயக்குமார் பேசுகையில், கேடு கெட்ட கேவலமான கதை தான் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் கதை. இந்தப்படத்தின் கதையை இயக்குநர் நிறைய தயாரிப்பாளர்களிடம் சொல்லியுள்ளார், ஆனால் அவர்கள் எல்லோருமே மறுத்துவிட்டனர். நான் கூட இந்தப்படத்தின் கதையை மிகவும் யோசித்து யோசித்து தான் தேர்வு செய்தேன் என்றார்.
ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், நான் மிகவும் சாப்ட் கேரக்டர், அப்படியிருந்த என்னை இயக்குநர் ரொம்ப கெடுத்துவிட்டார். கிட்டத்தட்ட 2 வருடமாக நான் தான் படம் பண்ண வேண்டும் என்று கேட்டு வந்தார். இந்தப்படத்தில் 3 பாடல்கள் என்னை கவர்ந்துள்ளது. தர லோக்கலான படம் இது. அடுத்தப்படியாக இயக்குநர் வெற்றிமாறனின் திரைக்கதையில், அட்லியின் வசனத்தில், எனது நண்பர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன். டார்லிங் படத்திற்கு கொடுத்த ஆதரவை இந்தப்படத்திற்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றார்.
முருகதாஸ் பேசுகையில், ஜி.வி.நன்றாக நடனம் ஆடியுள்ளார். அவரது முதல்படத்தை நான் தயாரிக்க முடியவில்லை, எவ்வளவு பெரிய ஹீரோவானாலும், கண்டிப்பாக எனது பேனரில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படம் பண்ணுவார் என்றார்.
ஞானவேல் ராஜா பேசுகையில், ஜிம்மில் இருந்தவரை டார்லிங் படத்தில் நடிக்க வைத்தோம். டார்லிங் படத்தில் பேய்யாக வரும் ஹீரோயின், ஹீரோவை அறைவார் என்பதை கேட்டு நிறைய ஹீரோக்கள் டார்லிங் படத்தில் நடிக்க மறுத்தார்கள். ஆனால் ஜி.வி.பிரகாஷ் மட்டும் ஓ.கே. சொன்னார். நல்ல நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறார் ஜி.வி. இதை அப்படியே அவர் தொடர்ந்தார் என்றால் இன்னும் நல்ல நிலைக்கு போகலாம் என்றார்.
ஏ.எல்.விஜய் பேசுகையில், ஜி.வி. எனது நெருங்கிய நண்பர். நிறைய விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வேன். தலைவா படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க கேட்டபோது ரொம்ப யோசித்தார். பிறகு வாங்கண்ணா பாடலில் ஒரு ஸ்டெப் ஆடவே நிறைய பயிற்சி எடுத்து பின்னர் ஆடினார். ஒரு இசையமைப்பாளர் எப்படி நடித்து கொண்டே இசையமைப்பார் என்ற தயக்கம் இருந்தது, ஆனால், முன்பை விட இப்போது தான் அவர் நல்ல பாடல்களை சீக்கிரம் கொடுக்கிறார் என்றார்.
நா.முத்துக்குமார் பேசுகையில், இப்போது தான் வெயில் படத்தில் வேலை பார்த்த மாதிரி இருந்தது, அதற்குள் ஜி.வி., 50 படம் தாண்டிவிட்டார். அவரது வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது, இசையமைக்க 10 படம், நடிக்க 4 படம் என நேரம் ஒதுக்கி வேலை பார்க்கிறார். வேலையை எப்படி பிரித்து பார்க்க வேண்டும் என்பதை அவரிடம் நான் கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.
விழாவில், தாணு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய், பார்த்திபன், நா.முத்துக்குமார், ஸ்டூடியே கிரீன் ஞானவேல்ராஜா, ஆனந்தி, மனீஷா யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படக்குழுவை வாழ்த்தினர்.