'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நேற்று (ஜூலை 5) தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற விக்ரமன் அணியினர் மீண்டும் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இணை செயலாளர், மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களும் வாபஸ் பெற்றதையொட்டி தேர்தல் நடக்காமலேயே அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு:
தலைவர்: விக்ரமன்
துணை தலைவர்கள்: கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு
பொதுச் செயலாளர்: ஆர்.கே.செல்வமணி
இணை செயலாளர்கள்: லிங்குசாமி, சுந்தர்.சி, ஏகாம்பவாணன், பேரரசு,
பொருளாளர்: வி.சேகர்
செயற்குழு உறுப்பினர்கள்: ஐந்துகோவிலான், கமலகண்ணன், மனோபாலா, மூதுரை பொய்யாமொழி, நம்பிராஜன், ஜெயம்ராஜா, ராஜா கார்த்திக், ரமேஷ் கண்ணா, ரவிமரியா, சமுத்திரகனி, திருமலை, வேல்முருகன்.
இதனை நேற்று தேர்தல் அதிகாரியும், வழக்கறிஞருமான சிங்காரவேலன் முறைப்படி அறிவித்தார். பின்னர் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர் அவருக்கு தேர்தல் அதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார் வருகிற 8ந் தேதி சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. அதில் பல புதிய திட்டங்களை அறிவிக்கிறார் தலைவர் விக்ரமன். அதோடு மேலும் 5 நியமன செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.