Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலேசியா, ஜப்பானில் படமாக்கப்பட்ட சாஹசம் பாடல்காட்சிகள்!

06 ஜூலை, 2015 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Saahasam-song-shoot-in-Japan-and-Malaysiya

பிரஷாந்த், அமண்டா, நர்கிஸ் பக்ரியுடன் இணைந்து நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமி நாதன், லண்டன் இந்து, பிரம்மாஜி, சாய்பிரஷாந்த், ஹேமா, ராவ்ரமேஷ், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ்கான், கிருஷ்ணவம்சி, மிப்பு, ராஜேந்திரநாத், என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.


வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் பிரஷாந்தின் ”சாஹசம்” படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை. கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மலேசியா மற்றும் ஜப்பானில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. பிரஷாந்துடன் இந்தியாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் மற்றும் மலேசிய நடன கலைஞர்கள் சேர்ந்து ஆடிய ''சாயாங் கு'' என்ற பாடல் காட்சி மலேசியா மொத்தமும் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது. பாபா பாஸ்கர் விசேஷமான நடன அசைவுகளை சாஹசம் படத்திற்காக பிரத்யேகமாக அமைத்துள்ளார்.


''சாயாங் கு'' என்றால் மலேசிய பாஷையில் கண்ணே, அன்பே, ஆருயிரே என்று காதலர்களுக்குள் வழங்கும் ஒரு பாசமான அழைப்பு. ''சாயாங் கு'' பாடல் மலேசியா மட்டுமல்லாமல் உலகிலுள்ள மொத்த இளைஞர்களுக்கும், காதலர்களுக்கும் கீதமாகுமாம்.


மலேசியாவை தொடர்ந்து 'ஆங்கிரி பேர்ட் (Angry Bird) என்ற பாடல் ஜப்பானில் 8 நாட்கள் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட ஜப்பானிய நடன கலைஞர்கள் கலந்து கொண்டு ஜப்பானில் எழில் கொஞ்சும் இயற்கை அழகுமிக்க இடங்களில் பிரஷாந்த், அமண்டாவுடன் சேர்ந்து நடனமாடும் காட்சிகளை காயத்ரி ரகுராம் நேர்த்தியாக படமாக்கினார். இந்த பாடலை இந்தியாவில் தலைசிறந்த பாடகரான மோஹித் சவுகான் பாடியுள்ளார்.


ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி சாஹசம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். பிரஷாந்துடன் இணைந்து அற்புதமாக உருவாகும் சாஹசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என மனம் உருகி போகிறாராம் அமண்டா.


புதியவர் அருண்ராஜ் வர்மா, சாஹசம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக, திரைக்கதை, வசனம் எழுதி ஏராளமான பொருட்செலவில் சாஹசம் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.


முடிவடையும் தருவாயிலுள்ள பிரஷாந்தின் சாஹசம் படம் வெகுவிரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம். சாஹசம் படத்தின் பாடல் வெளீயீட்டு விழா வெகு விரைவில் நடைபெறும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹசம் படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்குமாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in