ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம், கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். ராஜா ராணி படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா, கேரளா ஹவுசில் நடைபெற்றிருந்த நிலையில், விஜய் நடிப்பிலான விஜய் 59 படத்தின் துவக்க விழாவையும் சென்டிமென்ட் கருதி, கேரளா ஹவுசில் நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் அட்லீ.
சிம்புதேவனின் இயக்கத்திலான புலி படத்தின் பணிகளை முடித்த கையோடு லண்டன் சென்றிருந்த நடிகர் விஜய், ஒரே சூட்டோடு, அட்லீ இயக்கத்திலான படத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 59 படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில், விஜய்க்கு, அசத்தலான இன்ட்ரோ சாங் ஒன்று உள்ளது. முதற்கட்டமாக, அந்த பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமந்தா மற்றும் எமி ஜாக்சன், இப்படத்தில் முன்னணி கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். இவர்கள் தொடர்பான காட்சிகள், அடுத்த செட்யூலில் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.