ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெட்ராஸ், பரதேசி உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ரித்விகா. குறிப்பாக மெட்ராஸ் படத்தில கலையரசனுக்கு ஜோடியாக நடித்த இவர், படம் முழுக்க மேக்கப்பே போடாமல் நடித்திருந்தார். இவரது ரொமான்ஸ் நடிப்பு பெரிதாக பேச வைத்தது. அதனால் தற்போது குறிப்பிடத்தக்க கேரக்டர் நடிகையாகி விட்டார் ரித்விகா. அதிலும் கவுண்டமணி நடிக்கும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் அவரது மகளான முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதேபோல் வேறு சில படங்களிலும் கேரக்டர் ரோல்களில நடிப்பதாக சொல்லும் ரித்விகா, பிடித்தமான கதைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், மெட்ராஸ் படத்திற்கு பிறகு என்னைத்தேடி சுமார் 30 படங்களுக்கும் மேல் வந்தது. ஆனால், பல படங்களில் எனக்கு தரப்பட்ட கேரக்டர் பிடிக்கவில்லை என்பதால் தவிர்த்து விட்டேன். குறைவான சில படங்களை மட்டுமே ஓகே செய்து நடித்து வருகிறேன்.
மேலும், சினிமாவில் நல்லதொரு குணசித்ர நடிகையாக இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் கிளாமர் அல்லாத வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் ரித்விகா.