ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு நடித்த படம் - '36 வயதினிலே'.
சமீபத்தில் ரிலீசான 36 வயதினிலே படம் சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட் படநிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்தது.
ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிர் என்பதே இப்படத்துக்கு பப்ளிசிட்டியைக் கொடுத்தது. விளைவு... 36 வயதினிலே படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றி ஜோதிகாவுக்கு மட்டுமல்லாமல் '2டி' நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்தது.
'36 வயதினிலே' வெளியாகி தற்போது 50 ஆவது நாளை தொட்டு இன்னமும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இது சூர்யா, ஜோதிகா உட்பட '36 வயதினிலே' படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.