ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
டோலிவுட்டின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 6 ஆம் தேதி லண்டனில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு நன்னுக்கு பிரேமதோ என்று பெயரிடப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என் பிரசாத் தண்டயாத்ரா எனும் தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் இதனை ஜூனியர் என்.டி.ஆரின் படத்திற்காகவே தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என் பிரசாத் பதிவு செய்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது.இதனால் படக்குழுவினர் இவ்விரு தலைப்புகளில் ஒன்று ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் தலைப்பாக தேர்வு செய்யப்படலாம் என கூறுகின்றனர்.