இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு தயாரித்து நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார். ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு பாகுபலி படத்தின் வெளியீட்டால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைபாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக பாடல்கள் குறித்த படப்பிடிப்புகள் மட்டுமே தற்போது நடைபெறுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மகேஷ் பாபு இப்படத்தில் தனக்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் நடிகை சுகன்யா மற்றும் நடிகர் கெஜபதி பாபு ஆகியோர் மகேஷ் பாபுவிற்கு அம்மா அப்பாவாக நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார்.