ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு படத்திற்குக் கதை கூட கிடைத்து விடும் போலிருக்கிறது, ஆனால், கதாநாயகிகள் கிடைப்பதுதான் மிகவும் கடினமாக உள்ளது என்கிறார்கள். விஷால் தற்போது நடித்து வரும் 'பாயும் புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், லிங்குசாமி இயக்கும் 'சண்டக் கோழி 2' படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த இரண்டு படத்திலும் விஷால் ஜோடியாக நடிக்கப் போவது யார் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படாமலேயே உள்ளதாம். இரண்டு படத்திற்குமான ஜோடியை வலை வீசித் தேடி வருகிறார்களாம். ஏற்கெனவே, இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என வந்த செய்திகளைக் கூட விஷால் மறுத்துவிட்டார். முன்னணி நட்சத்திரங்கள் யாருடைய கால்ஷீட்டும் கிடைக்காத பட்சத்தில் ஒரு சில படங்களில் நடித்த நடிகைகளை விஷாலின் ஜோடியாக்கலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.
'மெட்ராஸ்' படத்தில் நாயகியாக நடித்த கேத்தரீன் தெரசா பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோடியாக நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 'சண்டக்கோழி 2' படத்தில் மீரா ஜாஸ்மின் அளவிற்கு துறுதுறுப்பான ஹீரோயின் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தேடி வருகிறார்களாம். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் அநேகமாக ஒரே சமயத்தில் ஆரம்பமாகும் என்றும் தெரிகிறது.