பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலகளவில் மாபெரும் வசூலை குவித்து கொண்டிருக்கிறது ஹாலிவுட் படமான ஜூராசிக் வேர்ல்டு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், ஜூராசிக் வேர்ல்டு படத்தை விட என் படம் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் சல்மான்கான். பாலிவுட்டில் உள்ள பிரபலங்கள் பலருக்காக ஜூராசிக் வேர்ல்டு படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. சல்மான்கான், சினேகா உல்லல் உள்ளிட்ட பலரும் இந்த காட்சியை பார்த்து ரசித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு சல்மான் கூறுகையில், ஜூராசிக் வேர்ல்டு படத்தை விட எனது படமான பஜ்ரங்கி பகிஜான் படம் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.
சல்மானின், பஜ்ரங்கி பகிஜான் படம் வருகிற ஜூலை 17ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.