Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இவர் யாரென்று தெரிகிறதா...?

02 ஜூலை, 2015 - 14:27 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-who-is-this.?

புகைப்படத்தில் இருக்கும் நடிகரை உங்களால் கண்டிப்பாக மறக்க முடியாது. 1973ல் வெளிவந்த 'பாபி' திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ளவர்களையும் மயக்கிய ரிஷி கபூர். அதன் பின் எத்தனையோ ஹிந்திப் படங்களில் நடித்தவர். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருடைய டிவிட்டரில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தைப் போட்டு 'இவர் யாரென்று தெரிகிறதா ?' என ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். பலரும் பல பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். அவர் வேறு யாருமல்ல ரிஷி கபூருடன் 'தாமினி' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த மீனாட்சி சேஷாத்திரி.


தமிழ்ப் பெண்ணான மீனாட்சி சேஷாத்திரியை இன்றைய இளம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1981ல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற மீனாட்சி சேஷாத்திரி 1983ல் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் “ஹீரோ, லவ்வர் பாய், மகா குரு, தூஃபான், காயல், தாமினி, ஹம்ஷகல்” உள்ளிட்ட ஏராளமான ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். 'மகாகுரு' படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.


தமிழில் பாக்யராஜ் நாயகனாக நடித்த, 'என் ரத்தத்தின் ரத்தமே' படத்திலும், பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த் நடித்த 'டூயட்' படத்திலும் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பின் நடிப்பை விட்டு விட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று விட்டார். இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் பழைய திரையுலக நண்பர்களை சந்திப்பது மீனாட்சியின் வழக்கமாம். அப்படி ஒரு நாள் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் ரிஷிகபூரைப் பார்க்கச் சென்று அவரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அவருக்கே முதலில் மீனாட்சியை அடையாளம் காண முடியவில்லையாம். அந்த ஆச்சரியத்தை ரசிகர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரிஷி கபூர்.


உண்மையிலேயே மேக்கப் இல்லாத மீனாட்சி சேஷாத்திரியைக் கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in