ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக சின்னத்திரைகளில் நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சிகள் என்று எதுவாக இருந்தாலும், அவை சில நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் திறமைக்கேற்ற மதிப்பெண்களை வழங்கி வருகிறார்கள்.
அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் அதே சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் அதற்கான படப்பிடிப்பு சென்னையில் 6 நாட்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முந்தைய ஸ்டேன்டப் காமெடிகள் சொல்லிய சிலரும் கலந்து கொண்டபோதும், பல திறமை வாய்ந்த புதியவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அதோடு, இந்த நிகழ்ச்சியை திறனாய்வு செய்து காமெடியன்களுக்கு மதிப்பெண் வழங்கும் நீதிபதிகளாக யூகிசேது, ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேடையில் தோன்றும் காமெடியன்கள் சொல்லும் காமெடிக்கு நடுவே இவர்களும் புகுந்து அவ்வப்போது சரவெடி காமெடிகளை தெளிக்கும் புதுமையான முறையில் இந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் புதிய வடிவம் படமாக்கப்பட்டிருக்கிறது. இம்மாதம் முதல் இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.